உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே துப்பாக்கிச்சூடு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
53 பார்வைகள்

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், பர்மிங்காமின் போயர் சாலை (Bowyer Road) பகுதியில், செயிண்ட் சேவியர்ஸ் சாலைக்கு (St Saviours Road) அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மேற்கு மிட்லாந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி காட்சிகள் சேகரித்தல் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் துப்பாக்கிச் சூடு அருகிலுள்ள பள்ளிவாசலை குறிவைத்து நடத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மிட்லாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிப்பதற்காக எங்கள் அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தங்களிடம் வீடியோ பதிவு, சிசிடிவி காட்சிகள் இருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0