உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை எவரும் ஆய்வு செய்ய முடியாது! – ஈரான் அதிரடி

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

போரினால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வௌியிட்டுள்ள ஈரான் பாராளுமன்ற சபாநாயகர், தற்போது ஆய்வாளர்களுக்கு புஷெர் மின்நிலையம் மற்றும் தெஹ்ரான் உலை ஆகிய இரு இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய அணுசக்தி நிலைய ஆய்வுகளுக்கான அணுகலைத் தடை செய்யும் சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும் காலிபாஃப் தெரிவித்தார்.

பாராளுமன்றமே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதுடன், அதி உயர் தேசிய பாதுகாப்பு சபையும் இதற்கு இணையான தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் அணுசக்தி நிலையங்களை IAEA ஆய்வாளர்கள் அணுகி ஆய்வு செய்ய வேண்டும் என்று அதன் தலைவர் ரஃபேல் குரோசி கூறியதைத் தொடர்ந்தே காலிபாஃப்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நாங்கள் விரைவில் அங்கு செல்வோம் என்று நம்புகிறோம் எனவும் ரஃபேல் குரோசி குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

86 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0