உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்ப கிரிப்டோகரன்சி வணிகங்கள் மூலம், கடந்த ஓராண்டில் மாத்திரம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவரது புதிய நிதி நிலை விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரச நெறிமுறைகள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையின்படி, ட்ரம்பும் அவரது மகன்களும் இணைந்து ஆரம்பித்த ‘வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்’ (World Liberty Financial) கிரிப்டோ நிறுவனம் மூலமாக 800 மில்லியன் டொலர்களும், ட்ரம்ப் ஞாபகார்த்த ‘மீம் கொயின்களை’ (Meme Coins) விற்பனை செய்ததன் மூலம் 635 மில்லியன் டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

2025இல் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்கு சாதகமான கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம் அவரது மின்னிலக்க சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிப்டோ தவிர அவரது பாரம்பரிய வணிகங்களான கோல்ஃப் மைதானங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மூலமும் வருமானம் 15 சதவீதத்தால் அதிகரித்து, 500 மில்லியன் டொலரைக் கடந்துள்ளது.

குறிப்பாக, புளோரிடாவிலுள்ள அவரது ‘மார்-ஏ-லாகோ’ விடுதியின் வருமானம் 77 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இருப்பினும், ட்ரம்போ அல்லது அவரது குடும்பத்தினரோ தங்களது பதவியைப் பயன்படுத்தி எந்தவொரு தனிப்பட்ட ஆதாய மோதல்களிலும் ஈடுபடவில்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

87 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0