உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் அதிகமான மின்னல்கள்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
54 பார்வைகள்

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது.

இதையடுத்து, அங்கு முதல்முறையாக ‘கோட் ரெட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அதீத வெப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்ததையடுத்து, அங்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட கடுமையான அழுத்த மாறுபாடுகள் மற்றும் காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை இணைந்து, ஜூன் 28 ஆம் திகதி ஒரு மகா மின்னல் புயலை (Supercell thunderstorm) உருவாக்கின.

இந்தப் புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது, நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனி பகுதிகளில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 30,000 மின்னல்களை வெட்டின. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் சுமார் 17 மின்னல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

இதன்மூலம், 24 மணி நேர இடைவெளியில் மட்டும் துல்லியமாக 3,01,137 மின்னல் வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, நெதர்லாந்து அரச வானிலை ஆய்வு நிறுவனம் (KNMI)உறுதிப்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மின்னல் பதிவுகள் கணக்கிடத் தொடங்கப்பட்டதிலிருந்து, அனைத்துத் தரவுகளும் முழுமையாகச் சேர்க்கப்பட்டால் இந்தப் புயல் 5 லட்சம் மின்னல்களைத் தொட்டு புதிய சாதனை படைக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுமார், நான்கு மணி நேரம் இந்த மின்னல் வெடிப்புகள் வானில் அழகாய்த் தோன்றினாலும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0