உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுலாவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3வயது சிறுவன் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
50 பார்வைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன் ஒருவன், 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

கிளைபர் மொரான் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்தச் சிறுவன், லா குவைரா (La Guaira) மாகாணத்தில் உள்ள இடிபாடுகளுக்கு இடையில் இருந்து ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

அச்சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கராகஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வெனிசுலா அதிகாரிகள், தற்போது சிறுவனின் ஆரோக்கிய நிலைமை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது.

அறிக்கைகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளதுடன், 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாசா (NASA) அமைப்பின் ஆரம்பக்கட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, 58,000-க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிந்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மீட்புக் குழுவினரும் நிவாரணப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காகத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அந்நாட்டின் சுகாதாரச் சேவைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதுடன், போதிய தடுப்பூசி பாதுகாப்பு இல்லாததால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0