உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
74 பார்வைகள்

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ (Federal Reserve) வங்கியின் ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5-4 என்ற வாக்கு வித்தியாசத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் பணி நீக்க முயற்சியை உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

இதன்படி, லிசா குக் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.

சட்டப்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்வதற்கு முன் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

எனினும், லிசா குக் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முன்னதாகத் தகுந்த வாய்ப்பை தலைமை நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுபவர்கள் அல்ல என்றும், அவர்கள் 14 ஆண்டு கால பதவிக்காலத்தைக் கொண்டவர்கள் என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், லிசா குக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அல்லது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0