உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவித்தல்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
72 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமே மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு ஊர்வல விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், ஜூலை 9ஆம் திகதி ஈரானின் புனித நகரான மஷ்ஹாத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உலகத் தலைவர்கள் பலருக்கும் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள ஈரானிய அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி முன்கூட்டியே திட்டமிட்ட உத்தியோகபூர்வ இராஜதந்திரப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதால், அவரால் இந்த இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியான் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, இந்திய அரசாங்கத்தின் சார்பில் இரண்டு உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்திய அரசு சார்பில் பீகார் மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகிய இரு உயர்மட்டப் பிரதிநிதிகள் ஈரானிற்குச் சென்று இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், ஈரானுடனான நீண்டகால இராஜதந்திர மற்றும் வரலாற்று நட்புறவை நிலைநிறுத்தும் நோக்கில் இந்தியா இந்த உயர்மட்டப் பிரதிநிதிகளை அனுப்பவுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0