உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
105 பார்வைகள்

வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரதான சந்தை வீதியில் இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான சிற்றூர்தி மரக்கறி, பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை. இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தியின் சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்றதனால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிஞ்சை கம்பம், கடைகளின் பொருட்கள், சைக்கிள் என சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சாரதிக்கு தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்து திருட்டுத்தனமாக சிற்றூர்தியை எடுத்துச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0