உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
75 பார்வைகள்

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி ‘போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

பிரஜா சக்தி மற்றும் மூர்வீதி கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

பிரஜா சக்தி மூர்வீதி கிராம தலைவர் ஏ.ஆர்.றஹீம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மூர்வீதி கிராம அலுவலர் பெனடிற், மூர்வீதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அமியஸ், மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னாரில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் அதிகரித்து காணப்படும் நிலையில் குறிப்பாக மூர்வீதி கிராமத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டல் வழங்கும் வகையில் குறித்த நிகழ்வு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது பிரஜா சக்தி மூர்வீதி கிராம தலைவர் ஏ.ஆர்.றஹீம், மூர்வீதி கிராம அலுவலர் பெனடிற், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் போதைப்பொருள் பாவனை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வழங்கினர்.

மேலும் மூர்வீதி கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் தமது வீடுகளைச் சுற்றி எந்த நேரங்களிலும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அறிந்தால் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், கலந்து கொண்டவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0