உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் எயார் வேய்ஸுக்கு கடும் விமர்சனம்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
48 பார்வைகள்


பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார் வேய்ஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது இணையதளத்தின் மூலம் பரிந்துரைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது இணையதளத்தில் பயண அனுமதிப் பத்திர சேவைகளை வழங்கும் Sherpa என்ற நிறுவனத்தின் சேவையை பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.

ஆனால், இந்த நிறுவனம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிக தொகையை அறவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக அமெரிக்காவுக்குச் செல்ல தேவையான ESTA எனப்படும் 90 நாட்கள் செல்லுபடியாகும் பயண அனுமதிப் பத்திரத்திற்கு அமெரிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் சுமார் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கிறது.

ஆனால் அதே அனுமதிப் பத்திரத்தை Sherpa நிறுவனம் 51 பவுண்டுகளுக்கு விற்பனை செய்கிறது. அதேபோல் அவுஸ்திரேலியாவின் eVisitor அனுமதிப் பத்திரம் அரசின் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும்போதும்,Sherpa அதற்காக 17 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் நல ஆலோசகரான மார்ட்டின் லூயிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ் என்பது தரமான சேவைக்காக அறியப்படும் பிரித்தானியாவின் தேசிய விமான நிறுவனம்.

ஆனால், இந்த நடைமுறை அதை ஒரு நம்பகமான நிறுவனமாக அல்லாமல், அதிக லாபம் நோக்கும் நிறுவனமாக காட்டுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்,  பயணிகள் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்கள் மூலமாகவே பயண அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

78 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0