யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன.
அதில் இருந்து துருப்பிடித்த T-56 துப்பாக்கிகள் 30 மற்றும் 5,000க்கும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நிலத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.



