உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
60 பார்வைகள்


வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுலாவின் தலைநகருக்கு மேற்கே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (24) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், தலைநகர் காரகாஸில் கட்டிடங்களை இடித்துத் தள்ளியதுடன், மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்தன. 

இதனால், அந்த தென் அமெரிக்க நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகளும் பரவலான அழிவுகளையும் சந்தித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, கராகஸுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ (100 மைல்) தொலைவில் 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 7.5 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

81 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

80 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0