உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆண்டி பர்ன்ஹாம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்களால் சர்ச்சை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
107 பார்வைகள்

நேட்டோ (NATO) பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேக்கர்ஃபீல்டின் புதிய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த தனது கருத்தைப் பற்றி புதன்கிழமை செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஆண்டி பர்ன்ஹாமைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றும், அவர் “தீவிர தாராளவாதக் கொள்கை கொண்டவர்” என்று மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், பர்ன்ஹாம் வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கமாட்டார் என்று நம்புவதாகவும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவுடனான வெள்ளை மாளிகை சந்திப்பின்போது ட்ரம்ப் கூறினார்.

தொழிற் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாகப் போட்டியிடப் பரிந்துரைக்கப்படும் ஒரே நபராக பர்ன்ஹாம் உள்ள நிலையில், ஜூலை மாத நடுப்பகுதியில் அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் இருவருக்கும் இடையே ஒரு சிக்கலான உறவு உருவாகக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

145 0 0