உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்பார்த் அவர்களிடம் மட்டு ஊடக அமையத்தில் வைத்து ஊடகவியலாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் துணை தூதுவருக்கும் மட்டு ஊடக நிர்வாகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு, அரசாங்கத்தின் தற்கால செயற்பாடுகள், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜேர்மன் துணை தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பல்வேறுபட்ட விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், ஊடாக சுதந்திரத்தை பாதுகாக்கவும், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் ஜேர்மன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இச் சந்திப்பில், மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ. கிருஷ்ணகுமார், பொருளாளர் கிருஷ்டிராஜ், மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், செ. நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

30 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0