உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

‘ட்ரில்லியனர்’ அந்தஸ்த்தை இழந்தார் எலோன் மஸ்க்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
51 பார்வைகள்

உலகின் முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர்  எலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை இழந்துள்ளார்.

அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பாரிய வீழ்ச்சியைக் சந்தித்ததைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 350 பில்லியன் அமெரிக்க டொலர்களால் சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் 1.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் காணப்பட்ட அவரது நிகர சொத்து மதிப்பு, தற்போது சுமார் 957 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் உலகமே பெரிதும் எதிர்பார்த்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டைத் (Public Listing) தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ஈலோன் மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் வெகுவாக அதிகரித்தன.

இதன் மூலமே அவர் 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்திருந்தார்.

எனினும், அதன் பின்னர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் உச்ச வரம்பிலிருந்து 30 சதவீதத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளன. அத்துடன் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்ததால், ஈலோன் மஸ்கின் பெருமளவிலான சொத்துக்கள் கரையத் தொடங்கின.

இந்தத் திடீர் சொத்து வீழ்ச்சிக்கு மத்தியிலும், ஈலோன் மஸ்க் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இன்னமும் முதலிடத்திலேயே நீடிக்கின்றார். அவரது சொத்துக்களில் பெரும்பகுதி ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகளிலேயே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி செல்வந்தர்களின் சொத்துக்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் சந்தை மதிப்புகளோடு எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவை எவ்வளவு வேகமாக மாறக்கூடும் என்பதையும் இந்தச் சரிவு வெளிப்படுத்தியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

85 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0