ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தனிந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது.
இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டொலர் நிதியை கோரியுள்ளது.
போரின் ஆரம்ப கட்டத்தில் இப் போருக்கு 200 பில்லியன் டொலர் செலவாகும் என பென்டகன் மதிப்பிட்டிருந்தது.
அதன்படி பார்த்தால் 80 பில்லியன் டாலர் குறைவான தொகை என்றாலும், ஈரான் போரால் அமெரிக்காவின் இழப்பு மேலும் பல்லாயிரம் டொலர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில், அடுத்த ஆண்டிற்கான பென்டகன் பாதீடு 1.5 டிரில்லியன் டாலராக சாதனை அளவாக இருக்க வேண்டுமென அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இது நடப்பாண்டின் பாதீட்டை விட 50 சதவீதம் அதிகம்.