உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
75 பார்வைகள்

மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி, கடந்த ஜூன் 16 முதல் ஜூன் 22 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேர்வுப் பாரபட்சமின்மையைக் கருத்திற்கொண்டு அரசின் தற்காலிகத் தடை உத்தரவு செல்லும் எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.

மத்திய அரசு விதித்த ஒரு வார காலத் தடை நேற்றுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டெலிகிராம் செயலி வழமைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

செயலியின் இயக்கம் ஒட்டுமொத்தமாகத் திரும்பியுள்ள போதிலும், சில பகுதிகளில் இன்னும் முழுமையான பயன்பாடு கிடைக்கவில்லை எனப் பயனர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0