உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது – ஈரான் திட்டவட்டம்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
55 பார்வைகள்

அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே அமெரிக்கா இருமுறை எம்மீது தாக்குதல் நடத்தியதால், நாம் அந்த நாட்டை நம்பவில்லை.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் ஈரான் எப்போதும் தயாராகவே உள்ளது.

வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போதும் எமது பலத்தை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம். எமது பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை, இனிமேலும் அது குறித்து பேசப்படமாட்டாது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளிலும்,புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதிலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டு இராணுவத் தளபதி ஆகியோர் மேற்கொண்ட பெரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தின் முன்னேற்றமானது அமைதி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஏவுகணைத் திட்டங்களை வைத்திருப்பதற்கு ஏனைய நாடுகளைப் போன்றே ஈரானுக்கும் முழு உரிமை உண்டு என்றும், இதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0