உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லியை தாக்கும் தூசி புயல்!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.

தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் பார்வைத்திறன் குறைந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சில பகுதிகளில் இலேசான மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை படிப்படியாக வட இந்தியாவை நோக்கி முன்னேறி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழை நிலை உருவாகும் வரை கடுமையான தூசிப்புயல், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலைமைகள் தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், வானிலை அறிவிப்புகளை அவதானமாகப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0