உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
59 பார்வைகள்

கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள, நாட்டின் முதன்மையான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு செயல் அல்ல என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆலையில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், ஆலைக்குத் தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு திரவ வாயு உற்பத்தி 12.8 மில்லியன் தொன்கள் வரை குறையும் என கட்டாரின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ராஸ் லஃப்பான் துறைமுகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானியத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0