உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்; பெண்கள், முதியவர்கள் உட்பட 14 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
69 பார்வைகள்

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் அனுமதி இன்றி மணல் ஏற்றியவரைக் கைது செய்த விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், குடும்பப் பெண்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் முதியவர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உமையாள்புரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது என்று விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்துடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அதிரடிப் படையினர் கொண்டு செல்ல விடாது தடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த முறுகல் நிலைமை பின்னர் இருதரப்பு மோதலாக மாறியது.

இதனையடுத்தே, அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சம்பவ இடத்தில் இருந்த பாடசாலை மாணவிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 14 பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0