உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
60 பார்வைகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.

தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அமெரிக்காவின் அச்சுறுத்தல்களால் ஏதேனும் பலன் இருந்திருந்தால், அவர்கள் இன்று இருக்கும் விரக்தி நிலையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் தங்களுக்குள் சிந்திப்பதில்லையா? அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

அமெரிக்க தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளியிடும்போது கவனமாக இருப்பது நல்லது. எங்களது ஆயுதப் படைகள் முற்றிலும் வேறுபட்ட முறையில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் களத்தில் செயல்படுபவர்கள் நாங்கள்தான்” என்று மொஹமட் பாகர் கலிபாப் மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.

முன்னதாக,லெபனானில் உள்ள தங்களது ஆதரவு ஆயுதக் குழுக்கள் உடனடியாக வன்முறைகளை நிறுத்த ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவறும் பட்சத்தில் ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0