உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
78 பார்வைகள்

ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வரலாற்றின் மோசமான அளவை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.

இதனால் பிரான்சில் அவசரநிலை ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளதுடன்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பிரான்சின் தேசிய வானிலை மைய எதிர்வின்படி, இந்த வெப்ப அலையானது அடுத்த வாரம் வரையில் நீடிக்கக் கூடும் என்றும், இது 2003 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவான மிக மோசமான வெப்பநிலைக்கு நிகரானது என்றும் எச்சரித்துள்ளது.

இந்த நிலைமையை அடுத்து, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு இன்று அவசரக் நெருக்கடி காலக் கூட்டமொன்றை நடத்துகிறார்.

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் பூங்காக்களை 24 மணி நேரமும் திறந்து வைக்குமாறு பாரிஸ் துணை மேயர் இம்மானுவேல் கிரகோயர் உத்தரவிட்டுள்ளார்.

பிரான்சின் தென்மேற்குப் பகுதியிலிருந்து பாரிஸ் மற்றும் பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 பாகை செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும், சில இடங்களில் 41 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நாடு தழுவிய அளவில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வெப்பநிலை 38 பாகை செல்சியஸை நெருங்கியுள்ளது.

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக கடுமையான இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ஜெர்மனி வானிலை சேவை எச்சரித்துள்ளது.

இத்தாலியில் வெப்பநிலை 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ரோம் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியம் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.

மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க வரலாற்றுச் சின்னங்களின் நிழல்களிலும், நீர்நிலைகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.

போலந்தில், வோர்சா நகரில் உள்ள விஸ்டுலா ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மக்கள் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காகக் கூடி வருகின்றனர்.

காலநிலை மாற்றமே ஐரோப்பாவில் இதுபோன்ற அடிக்கடி நிகழும் தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது கோடைக்காலத்தில் சுகாதார அவசரநிலைகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0