உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரானின் அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நிரிணையில் கப்பல்கள் பயணம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
100 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை முடப்பட்டதாக கூறப்பட்ட ஈரானின்  அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

எனினும், இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் சர்வதேச கடல்வழிப் பாதையூடான பாதுகாப்பான போக்குவரத்து எவ்விதப் பாதிப்புமின்றித் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரே நாளில் 55 வணிகக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.

இதன் மூலம் பெருமளவிலான பொருட்களும், 17 மில்லியனுக்கும் அதிகமான மசகு எண்ணெய் பீப்பாய்களும் உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அமெரிக்கப் படைகள் அந்தப் பகுதியில் “தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0