உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
55 பார்வைகள்

தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தவெக அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே உதயநிதி ஸ்டாலின் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளும் அரசு தயாரித்துக் கொடுக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

அதில் மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முறையான திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற வேண்டும்.

ஆனால், இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையானது வெறும் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) போடுவதற்கான ஒரு ‘கண்டெண்ட்’ போல மட்டுமே அமைந்துள்ளது என அவர் சாடினார்.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னரான புதிய அரசியல் சூழலில், ஆளுநரின் இந்த அணுகுமுறை மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நேரடிக் குற்றச்சாட்டு ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0