உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரானின் அதிரடி சலுகை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
56 பார்வைகள்

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல விரும்பும் வணிகக் கப்பல்களுக்கு மிக விரைவாகப் பயண அனுமதிகளை வழங்குமாறு ‘பெர்சிய வளைகுடா நீரிணை அதிகாரசபைக்கு’ (Persian Gulf Strait Authority) ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில், கப்பல்களின் அனுமதி கோரும் விண்ணப்பங்களை அதிவேகத்துடனும் முன்னுரிமையுடனும் பரிசீலித்து பதிலளிக்குமாறு அந்த அதிகாரசபையின் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வணிகக் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அடுத்த 60 நாட்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் எந்தவொரு வணிகக் கப்பல்களிடமிருந்தும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் அறிவித்துள்ளது.

மசகு எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சர்வதேச கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0