உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவை இஸ்ரேல் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
55 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) இஸ்ரேலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜே.டி. வான்ஸ், தற்போதைய உலகச் சூழலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்புசக்தி என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஜனாதிபதி வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்கள் டொனால்ட் டிரம்ப் மீதும், இந்த அமைதி ஒப்பந்தம் மீதும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதை வன்மையாகக் கண்டித்தார்.

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாப்பு ஆயுதங்கள் அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலும், அமெரிக்கர்களின் கரங்களாலும் உருவாக்கப்பட்டவை என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வரும் நிலையில், தங்களின் உண்மையான பிரச்சினையை உணராமல் அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேல் அமைச்சர்கள் விமர்சிப்பது யதார்த்தமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகமோ அல்லது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஈரான் உடனான போர் காரணமாகப் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த ராஜதந்திர மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகல் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

84 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0