உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார்.

அவர் பேசி முடித்ததும், ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார்.

இதன் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 19,22,23 ஆகிய 3 நாட்கள் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கபட்டுள்ளதாக பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

மேலும், ஜூன் 23 ஆம் திகதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளிக்கவுள்ளார்.

மேலும் பேரவை நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்றும் பேரவை நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்பது குறித்தும் நேரலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் ஆய்வுக்குழு கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0