உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிடம் மட்டுமே இருக்கும்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அறுபது நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள பின்னணியில், ஹார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பாகிர் காலிபாஃப் (Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் எட்டப்பட்ட இந்த வரலாற்று உடன்படிக்கையின்படி, லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை நிறுத்தி, ஹார்முஸ் நீரிணையின் கடல் முற்றுகையை முப்பது நாட்களுக்குள் நீக்க அமெரிக்கா இணங்கியுள்ளது.

இதற்குப் பதிலாக தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், ஹார்முஸ் நீரிணையில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு முன்னூறு பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0