தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ உரையை நிகழ்த்கின்றார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் பின்னர் சட்டசபை அமர்வுகள் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, த.வெ.க. அரசின் முதலாவது கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது.