உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
47 பார்வைகள்

லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு புதிய தாக்குதலும் அல்லது லெபனான் பிரதேசங்களில் தொடரும் ஆக்கிரமிப்பும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள இடைக்கால உடன்பாட்டை மீறும் செயலாகக் கருதப்படும் என, ஈரான் எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஈரானுடன் நடைபெறவுள்ள 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி, ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் எந்தவித கட்டண வசூல்களும் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான், உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், தெற்கு லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் அங்கிருந்து விலகப்போவதில்லை என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0