உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
73 பார்வைகள்

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1 பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

2025 ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியுள்ள இந்த நோய் பரவலில் இதுவரை 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 142 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


அசுத்தமான உணவு, நீர் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவும் ஹெபடைடிஸ் ஏ, கல்லீரலைப் பாதிக்கும் தொற்று நோயாகும். பலவீனம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, மஞ்சள் காமாலை உள்ளிட்ட அறிகுறிகள் இதனால் ஏற்படக்கூடும்.

பயணிகள் கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0