உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
49 பார்வைகள்

பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.


இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் சமூக நலச் செலவினங்களைக் குறைத்து, அந்த நிதியை இராணுவப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துமாறு கன்செர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் தொழிற்கட்சியின் சாத்தியமான அடுத்தகட்ட தலைமைப் போட்டியாளர்களுக்கு கெமி பேடனோக் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் ஸ்டார்மருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உலகளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், நமது இராணுவத்திற்குப் போதுமான நிதி வழங்காமல் இருக்க முடியாது எனவும் அச்சுறுத்தல்கள் மிக அவசரமானவையாக இருக்கும் போது, அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தள்ளிப்போடக் கூடாது எனவும் இது நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் எனவும் ” கெமி பேடனோக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0