உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சற்றுமுன் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
85 பார்வைகள்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்களை இன்னமும் மீள்குடியேற அனுமதிக்காது, அப்பகுதி மக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குறித்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பயங்கரவாதச் சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுங்கள்; ஊடகவியலாளர்கள் போராட்டம்.!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும், சமூக ஊடக வெளிப்பாட்டுக்கான கூட்டமைப்பும் இணைந்து இன்று முற்பகல் பத்தரமுல்ல – பொல்தூவ சந்திக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

அரசை வீழ்த்த ஒன்றுபடுங்கள்.!

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ள தற்போதைய அரசு, நாட்டு மக்களை ஏமாற்றி, இனவாதத்தைத் தூண்டிவிட்டு அதிகாரத்தைத் தக்கவைக்க முயல்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

60 0 0
இலங்கை செய்திகள்

பேனாவுக்குள் தங்கத்தை வைத்து கடத்த முயன்றவர் கைது.!

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான ‘சுபம்’ கப்பலில் பரபரப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை…

51 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் கொ**லை; தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை.!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள்…

65 0 0