உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பொலிஸ்மா அதிபர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

புதிதாக அமைக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையமானது இன்றையதினம் கோப்பாயில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் திறந்து வைக்கப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலையமானது இதுவரை காலமும் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் புதிய கட்டடமானது திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் இடம்பெற்றது. பின்னர் சம்பிரதாய பூர்வமாக பொலிஸ் நிலையமானது திறந்த வைக்கப்பட்டு விருந்தினர்களின் உரைகள், கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதுவரை காலமும் கோப்பாய் பொலிஸ் நிலையம் யார் யாருடைய தனியார் காணிகளில் இயங்தியதோ அவர்களது கட்டடங்களின் திறப்புகள் அவர்களிடமே உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி, யாழ். அரசாங்க அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0