உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
50 பார்வைகள்

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சனிக்கிழமை (13) மருதமுனை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சுவிட்ஸர்லாந்து நாட்டின் அனுசரணையோடு நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள், முறையற்ற விதத்தில் மேற்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணங்களின் போது ஏற்படும் இடையூறுகள், பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை அறிந்து கொள்வது மற்றும் பாதுகாப்பான புலம்பெயர் பயணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு சட்டவிரோதமான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் ஊடாக பொதுமக்கள் மற்றும் தனி நபர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Dr. Siri Walt) கலந்து கொண்டு புலம்பெயர் தகவல் மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படுகின்ற தனிநபர் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

நிகழ்வின் போது புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனத்தின் இணைப்பாளர் சமீர் சாலிஹ், ஆலோசகர் சுமித்ரா சதாசிவம் ஆகியோர் சட்டரீதியான முறையான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0