உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டியுள்ளது.

இதன் மூலம், வரலாற்றிலேயே மிக அதிக மதிப்புடைய பங்குச்சந்தை பட்டியலிடலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (SEC) சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, ஒரு பங்கின் விலை 135 டொலராக நிர்ணயிக்கப்பட்டு பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப சந்தை மதிப்பு சுமார் 1.8 ட்ரில்லியன் டொலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டியலிடலின் ஊடாக, உலகின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க், உலகின் முதலாவது ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளார்.

நிறுவனம் பொது வர்த்தகத்திற்கு வந்தாலும், எலோன் மஸ்க் 84% க்கும் அதிகமான வாக்குரிமையுடன் (Voting power) நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்திருப்பார்.

இந்த அதீத அதிகாரம் காரணமாக, மஸ்க்கின் ஏனைய நிறுவனங்களை ஸ்பேஸ் எக்ஸ் கையகப்படுத்துவது போன்ற முடிவுகளை அவரே தனித்து எடுக்க முடியும் என பிபிசி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0