உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பிளாக்லி (Blackley) பகுதியில் உள்ள பிளான்ட் ஹில் (Plant Hill ) வீதியில் அமைந்துள்ள கோ-ஆப் அகாடமியில் நடந்த இந்த தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் மற்றும் 27 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழும் சந்தேக நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அவரை இன்று (12) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இது தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போது வரை இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்த சிறுவர்களும், ஊழியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை முடிவடைந்து அங்கிருந்து வெளியேறியதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0