உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
46 பார்வைகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (11) மிக வேகமாக உயர்ந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தாக விளங்கும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ மூடுவதற்கு ஈரான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பின்னர் , அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு பெரிய அளவிலான போருக்கான அறிகுறிகளைத் தோற்றுவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட செய்தி வெளியான சில மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளது.

சர்வதேச குறியீடான இதன் விலை 2.47% ஆல் (2.30 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளது.

இதன் விலை 2.89% ஆல் (2.60 டொலரால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 92.63 டொலராக உயர்ந்துள்ளது.

எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மற்றும் இதர வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்திற்கும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம் உத்தியோகபூர்வ அறிக்கை விடுத்துள்ளது.

தடையை மீறி அந்த கடல் எல்லையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தங்களது இராணுவம் இரக்கமின்றி தாக்குதல் நடத்தும்.

இதற்கிடையில், அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், தங்களது போர்க்கப்பல்கள் எதன் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஈரானின் எச்சரிக்கையையும் மீறி, சர்வதேச வணிகக் கப்பல்கள் இன்னும் பாதுகாப்பாகவே அந்த கடல் வழிப்பாதை வழியாகப் பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உலகளவில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்யில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே கடத்தப்படுவதால், இந்த முற்றுக்கட்டை உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0