உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா திட்டமிட்டு போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்


ஈரானின் தென்பகுதி ஹோர்முஸ்கான் (Hormozgan) மாகாணத்திலுள்ள சிரிக் (Sirik) துறைமுக நகரில் அமைந்துள்ள பொதுமக்களின் குடிநீர் உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவம் “திட்டமிட்டு” தாக்கியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் எஸ்மைல் பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலினால் 10 கிராமங்களைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் வழங்கி வந்த இரண்டு பிரதான நீர்த்தேக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது தற்செயலாக ஏற்பட்ட பக்கவிளைவுச் சேதம் அல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு போர்க்குற்றமாகும். அத்துடன், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும்” என்று சாடியுள்ளார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்புகள் மீது இவ்வாறான முறையான, கொடூரமான தாக்குதல்களை நடத்தியதற்காக அமெரிக்கா தகுந்த முறையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0