உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவுக்குப் புறப்படத் தயார் நிலையில் ஈரான் தேசிய கால்பந்து அணி!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஈரான் தேசிய கால்பந்து அணி அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.

ஜூன் 16-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, ஈரான் கால்பந்து அணியின் வீரர்கள் அமெரிக்கா செல்வதற்கான விசாக்களைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும், அந்த பிரதிநிதிகள் குழுவை சேர்ந்த நிர்வாக மற்றும் மேலாண்மைப் பிரிவினர் 12-க்கும் மேற்பட்டோருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமீர் மெஹ்தி அலவி வெளியிட்ட அறிக்கையில்,

“FIFA அமைப்பின் திட்டத்தின்படி, ஈரான் அணி சிறப்பு வானூர்தி (Charter flight) மூலம் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு ஒரு நாள் முன்பாக அணி போட்டி நடைபெறும் நகரத்தை சென்றடையும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளுக்கு, போட்டி நடக்கும் இடத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் சென்றடைவோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் அணி தனது உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி முகாமை திட்டமிட்டபடி அரிசோனாவில் உள்ள டக்சன் (Tucson) நகருக்குப் பதிலாக, மெக்சிகோவின் எல்லை நகரான டிஜுவானாவுக்கு (Tijuana) மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0