உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜெய்ப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்த மத வழபாட்டுத் தலங்கள் இடித்தழிப்பு!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
61 பார்வைகள்


ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள நந்த்புரி சுரங்கப்பாதையை 80 அடி சாலையாக அகலப்படுத்தும் பணி இடம்பெற்றுவருகிறது.

இதையொட்டி, சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 134 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தலங்களை அகற்ற காலஅவகாசம் வழங்கப்பட்டது.

காலக்கெடு முடிந்த நிலையில், விரிவாக்க பணி நடக்கும் பகுதியில் உள்ள மசூதி, இரு கோவில்கள், ஆன்மிக கூட்ட அரங்கம், தர்கா போன்றவற்றை ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் நேற்று இடித்து தள்ளியது.

இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க, 3,000 பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 12:00 மணி முதல் இன்று நள்ளிரவு வரை, இணையதள சேவை, ‘மொபைல் போன்’ குறுஞ்செய்தி சேவை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள், பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தாலோ, வெறுப்புணர்வைத் துாண்டினாலோ, புரளியை பரப்பினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்ப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0