உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
52 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) இந்தத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து CENTCOM தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை (Self-defense strikes) எமது படைகள் தொடங்கியுள்ளன.

ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு நிகரான மற்றும் பொருத்தமான பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0