உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும் உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதியானது வெறும் 21 கடல் மைல் அகலத்தைக் கொண்டது மாத்திரமே.

இதனால், இந்த நீரிணை முழுமையாக ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் பிராந்திய கடல் எல்லைக்குள்ளேயே அமைகின்றது.

இந்த சட்ட ரீதியான அமைப்பின் காரணமாக, இந்த நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும் முழு உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு என ஈரான் வலியுறுத்துகிறது.

வரலாற்று ரீதியாக இந்த வழித்தடத்தில் கட்டுப்பாடற்ற போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சட்ட நிலை இதுதான் என ஈரான் சுட்டிக்காட்டுகிறது.

ஈரானின் இந்த விளக்கத்தை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை என்பது உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச வழித்தடம் என்றும், அங்கு சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வாதிட்டு வருகின்றது.

இதன் காரணமாக, இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0