உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

இந்திய செய்திகள் 3 மாதங்கள் முன்
48 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் திரையுலகில் கிராமிய வாழ்க்கை முறையையும், மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து புதிய பாதையை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சாரும்.

1977 ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதன் பின்னர் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.

சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, யதார்த்த வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த இயக்குநராக அவர் போற்றப்பட்டார். தனது தனித்துவமான படைப்புகளுக்காக தேசிய விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

இயக்குநராக மட்டுமன்றி, பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறந்த நடிகராகவும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு, பாரதிராஜாவை ஆழமாகப் பாதித்திருந்ததாக நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0