உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

“இனி நேரடியாக மோதுவோம்”- ஈரான் கடும் எச்சரிக்கை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது என்று அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதும் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ள அவர், “அவர்கள் போர்நிறுத்த உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்படவுமில்லை, பேச்சுவார்த்தைகளை நம்பவுமில்லை. லெபனான் மீதான கடல்சார் முற்றுகை மற்றும் உடன்படிக்கை மீறல்கள் மூலம் தங்களுக்கு அதிகாரத்தின் மொழி மட்டுமே புரியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காலிபாப், தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஈரானிய நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடல்சார் முற்றுகை மற்றும் இன்று இஸ்ரேலிய விசுவாச ஆட்சிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள பச்சைக்கொடி ஆகியன, இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ முகாம்களையும் சொத்துக்களையும் தாக்குதலுக்கான நியாயமான இலக்குகளாக மாற்றியுள்ளன.” என குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு வழங்கி வரும் நிலையில், ஈரானிய உயர் மட்டத் தலைவரிடமிருந்து வெளிவந்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கில் போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0