உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணம் ரத்து!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதகமான வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ஜனதிபதிக்கு அதிகாரம் உண்டு என்ற குடிவரவுச் சட்ட விதிக்கமைய ட்ரம்ப் இந்த கட்டணத்தை விதித்திருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்ட இந்தக் கட்டணம், சட்டவிரோதமான ஒரு வரியாகும் என பொஸ்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் தீர்ப்பளித்துள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான கட்டணத்தை, கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக உயர்த்தியிருந்தார்.

இதற்கு எதிராக 20 மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சர்வதேச திறமையாளர்களை முடக்கும் ட்ரம்பின் முயற்சிக்குக் கிடைத்த வீழ்ச்சி” எனப் மனுதாரர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அதேவேளை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0