உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானிய துறைமுக வளாகத்தில் தீ விபத்து – 33 அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் SUV ரக வாகனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துறைமுகத்தின் வாகனக் களஞ்சியப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஜேக்கு இ5’ (Jaecoo E5) வகை வாகனங்களிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

தீ விபத்தின் போது பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்புப் பிரிவினர், நீண்ட போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0