உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘பரந்த’ அளவிலான பதிலடி தரப்படும் – ஈரான் எச்சரிக்கை

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

“அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம்” என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலமும், ஹோர்முஸ் நீரிணை, ஓமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் ஈரானியக் கடற்கரைகள் மற்றும் கப்பல்கள் மீது நாசகாரத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டும் தங்களது உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அந்த படை குறிப்பிட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதிலும், அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து பேணி வருவதுடன், கடந்த சில நாட்களாக இருதரப்பிலும் அடுத்தடுத்துப் பழிவாங்கும் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

“நேற்றிரவு நடத்தப்பட்ட நடவடிக்கை ஒரு எச்சரிக்கை மாத்திரமே” எனத் தெரிவித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, “அத்துமீறல்கள் மீண்டும் தொடருமானால், பதிலடிகள் இன்னும் பரந்த அளவில் இருக்கும்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0