வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் பெண்கள் விவகார அமைச்சரால் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்பட்ட விசேட நிவாரணம் மற்றும் கடன் வசதி பற்றி எடுத்துக் கூறப்பட்டதுடன் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களின் சிறுவர்களை பாதுகாக்க அரசாசனங்கத்தால் கொண்டு வரப்பட்ட 10000 ரூபா திட்டம் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து எழுதுமட்டுவாழ் பெண்களுக்கான பயிற்சி நிலையமும் அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பெண்கள் சுயதொழிலில் எவ்வாறு முன்னேறுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.














